Ads

Thursday, 14 November 2013

நான் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன் director bharathi raja

டைரக்டர் பாரதிராஜா பாண்டிய நாடு படத்தில் விஷாலுக்கு அப்பாவாக நடித்துள்ளார். ஆனால் நான் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன் என்று அவர் கூறினார். பாண்டியநாடு சக்சஸ் மீட்டில் அவர் பேசியதாவது: 1964ம் ஆண்டு சினிமாவுல நடிக்கிற ஆசையிலதான் சென்னைக்கு வந்தேன். அப்பெல்லாம் 40 வயசுக்கு மேல உள்ளவங்க மொளுமொளுன்னு முகம் உள்ளவங்கதான் நடிக்க முடியும். அதனால நடிக்கிற ஆசைவிட்டுட்டு டைரக்டர் ஆகிட்டேன். என்னோட கேமராமேன் நிவாஸ் கம்பல் பண்ணினதால கல்லுக்குள் ஈரம் படத்துல டைரக்டராவே நடிச்சேன். அந்தப் படத்துல நடிச்சது இப்பகூட எனக்கு பிடிக்கல. அப்புறம் கனல்னு ஒரு படத்துல ஒரே சீன் நடிச்சேன்.

ரொம்ப நாளைக்கு பிறகு கே.பி கம்பெல் பண்ணினதால ரெட்டைச்சுழிங்ற படத்துல நடிச்சேன். திரும்பவும் சொல்றேன். எந்த படத்துலேயும் நான் விரும்பி நடிக்கல. நடிச்சதும் எனக்கு பிடிக்கல. பாண்டிய நாடு படத்துக்கு வந்த கேட்டப்போ முடியவே முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் சுசீந்திரன் நல்ல திறமையான இளைஞன்னு அவனுக்காக நடிக்க ஒத்துக்கிட்டேன். பாண்டிய நாடு படத்துல நடிச்சதுலேயும் ஐயம் நாட் சேட்டிஸ்பேக்ஷ்ன். அடுத்து நானே ஒண்ணு ரெண்டு படம் பண்ணுவேன். அதுல நான் நடிப்பேன். அதுலதான் என்னோட முழு நடிப்பை பார்க்கலாம் என்றார்.

Director bharathi raja said I have no interest to act in film,cinema news,tamil cinema news,pandiyanadu film,director bharathiraja will act his  next own filmError! Hyperlink reference not valid.

No comments:

Post a Comment